பதிவு செய்த நாள்
24
ஜன
2019
02:01
அந்தியூர்: ஈரோடு மாவட்டம், அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில், மகா மண்டபத்தில், துர்க்கையம்மன் பஞ்சலோக சிலை இருந்தது. பக்தர்கள், அம்மனுக்கு நாள்தோறும், எலுமிச்சை, மண் விளக்கு தீபம் ஏற்றியும், ராகுகால பூஜை நடத்தியும் வழிபாடு நடத்தி
வந்தனர்.
ஆடி, சித்திரை மாதத்தில், அம்மனுக்கு, சிறப்பு பூஜைகள் நடக்கும். இந்த, துர்க்கையம்மன் சிலையை, கோவில் மண்டபத்தில் இருந்து, கருவறையின் உள்ளே, கோவில் நிர்வாகம் மாற்றி
வைத்தது. இதனால், பக்தர்கள் துர்கையம்மனுக்கு தீபம் ஏற்றி, வழிபட முடியாமல் போனது. சிலையை மீண்டும் பழைய இடத்திலேயே வைக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள்
விடுத்துள்ளனர்.
இது குறித்து, கோவில் செயல் அலுவலர், பாலமுருகன் கூறுகையில்,கோவில் மண்டபத்தில் இருந்த, துர்கையம்மன் பஞ்சலோக சிலையை, பாதுகாப்பு கருதி, கருவறையில் வைத்துள் ளோம். கோவில் மண்டபத்தில், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்த பின், மீண்டும் அதே இடத்தில் அம்மன் சிலை வைக்கப்படும், என்றார்.