பதிவு செய்த நாள்
24
ஜன
2019
03:01
சென்னை: மேற்கு மாம்பலம், சத்தியானந்த யோகா மையத்தின் சார்பில், நான்கு வார இலவச யோகா வகுப்புகள், ஜன.,27ல் துவங்குகிறது.சத்யானந்த யோகா மையத்தின் சன்யாசி கிருஷ்ண யோகம் சார்பில், இலவச யோக வகுப்புகள், பல பகுதிகளில் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, மேற்கு மாம்பலம், வசுதேவபுரம், பாலவித்யா மேல்நிலைப் பள்ளியில், சத்யானந்த யோகா மையத்தின் சார்பில், இலவச யோகா வகுப்புகள், ஜன., 27 முதல் துவக்கப்பட்டு, நான்கு வாரங்கள் நடத்தப்படுகிறது.
பீகார் யோகா பள்ளியால் ஆசனா, பிராயாமா, பிரத்யாஹரா, தர்ணா, மெடிடேஷன், மந்த்ரா, உணவு பழக்க வழக்கம் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
இப்பயிற்சி வகுப்புகள், வார நாட்களில், தினமும் காலை, 5:30 மணி முதல், 7:00 மணி வரை நடத்தப்படுகிறது. முன்பதிவிற்கு, 63830 08358 என்ற எண்ணிலும், syc@satyamyogatrust.net என்ற, இ - மெயிலிலும் தொடர்பு கொள்ளலாம்.