பழநிக்கு எடப்பாடி பக்தர்கள் காவடி: நுாறாண்டு தொடரும் பாரம்பரியம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜன 2019 12:01
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன்கோயில் தைப்பூச விழாவை முன்னிட்டு, சேலம் மாவட்டம் எடப்பாடியைச்சேர்ந்த பக்தர்கள் பால்குடம், காவடிகளுடன் குவிந்தனர். பழநி தைப்பூசவிழாவில் பங்கேற்க சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த பர்வதராஜகுல சமுதாயத்தினர் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒவ்வொரு ஆண்டும் காவடிகளுடன் வருவது வழக்கம். பலநுாறு ஆண்டு களுக்கும் மேலாக இந்த வழிபாட்டை அவர்கள் கடைபிடிக்கின்றனர். சில ஆண்டுகளாக கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தைப்பூசவிழா முடிந்தபின் வருகின்றனர். இந்தாண்டு தைப்பூச விழா நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து நேற்று மாலை முதல் எடப்பாடி பக்தர்கள் ஒவ்வொரு குழுவாக பால்குடங்கள், மயில், இளநீர், காவடிகளுடன் பழநிக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இன்று மலைக் கோயிலில் டன் கணக்கில் பஞ்சாமிர்தம் தயார் செய்கின்றனர். நாளை சண்முகநதியில் நீராடி அதன்பின் மலைக்கோயிலுக்கு காவடிகளுடன் ஊர்வலமாக வந்து சாயரட்சை பூஜையில் சுவாமி தரிசனம் செய்து மலைக்கோயிலில் இரவுமுழுவதும் தங்குகின்றனர். இவர்களுக்காக போக்குவரத்துக் கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.