அவலூர்பேட்டை காமாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜன 2019 12:01
அவலூர்பேட்டை:அவலூர்பேட்டை காமாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. மேல்மலையனூர் அடுத்த அவலூர்பேட்டை, பெத்தான்குளக்கரை அருகில் புதிதாக அமைக்கப் பட்ட காமாட்சி அம்மன் மற்றும் நவக்கிரக கோவில் கும்பாபிஷேகம் நேற்று (ஜன., 27ல்) நடந்தது.
அதனையொட்டி கடந்த 25ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. இரண்டாம் நாளான நேற்று முன்தினம் (ஜன.,26ல்) காலை யாக சாலை பூஜை நடந்தது. நேற்று (ஜன., 27ல்) காலை 9;00, மணிக்கு மகா பூர்ணாஹூதி தீபாராதனையும், மகா கும்பாபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. இதில் சுற்றுப்பகுதி கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.