பதிவு செய்த நாள்
30
ஜன
2019
03:01
பழநி : பழநி முருகன் கோவில் உண்டியலில், இந்தாண்டு ஒரே மாதத்தில், 6.85 கோடி ரூபாய் காணிக்கை கிடைத்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழநி முருகன் கோவில் தைப்பூச விழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால், ஜன.,10, 11ல் உண்டியல் எண்ணப்பட்டது. அதில் ரொக்கமாக, 2.19 கோடி ரூபாய் கிடைத்தது.தைப்பூச விழா முடிந்த பின், இரு நாட்களில் வசூலான உண்டியல் பணம் நேற்று எண்ணப்பட்டது. முதல்நாள், 2.71 கோடி ரூபாய் வசூலானது. நேற்று, 1.94 கோடி ரூபாயும், தங்கம்,- 291 கிராம், வெள்ளி, 10 ஆயிரத்து 980 கிராம், வெளிநாட்டு கரன்சி, 174 கிடைத்தது. ஜனவரியில் மட்டும், 6.85 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது, வழக்கத்தை விட, நான்கு மடங்கு அதிகம்.