பதிவு செய்த நாள்
31
ஜன
2019
12:01
திண்டுக்கல்: திண்டுக்கல் சவுராஷ்டிராபுரத்தில் சவுராஷ்டிரா ஸ்ரீவித்யா தர்ம சபைக்கு பாத்தியமான தட்சிணாமூர்த்தி கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.தட்சிணாமூர்த்தி, கணபதி, பாலமுருகன், கன்னி மூல கணபதி, நாகர்கள், குருபைரவர், பிரஹஸ்பதிக்கு வேதாந்த தேசிகன் ஐயங்கார், பழநி சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது.
கோயில் கவுரவ ஆலோசகர் டி.கே.சுப்பிரமணியன், கட்டட ஆலோசகர் அனுமந்தன், தர்மசபை தலைவர் வெங்கடராமன், உப தலைவர் மோகன், செயலாளர்கள் சுப்புராம், மோகன், பொருளாளர் ஐயங்கார், சட்ட ஆலோசகர் கே.பி.லிங்கையர், திண்டுக்கல் பி.எம்., சொர்ணம் பிள்ளை சன்ஸ் வெங்கடேசன், பாலவிக்னா வீவிங் மில்ஸ் இயக்குனர்கள், அம்பிகா பிளைவுட்ஸ் முருகன், சிவானந்தா கார்ப்பரேசன் டி.கே.லோகநாதன், எஸ்.எஸ்.கே. ஆனந்தன், சுபம் பேப்ரிக்ஸ் சிவராம், மோகன்ராம், என்.எஸ். குப்புசாமி சன்ஸ் நிறுவனத்தினர் உட்பட பிரமுகர்கள், பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.