பதிவு செய்த நாள்
31
ஜன
2019
12:01
அரூர்: தேவாதியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, அரூரில், 220 ஆட்டு கிடாய்கள் பலியிட்டு, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். தர்மபுரி மாவட்டம், அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, தேவாதியம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஒரு பிரிவினர் சார்பில், ஆண்டுதோறும் தை மாதம் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். வியாபாரம் மேம்படவும், குடும்ப நலம், ஊர் நலம், அமைதி, மழை வேண்டி நடத்தப்படும் இந்த விழாவில், ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வர். நேற்று முன்தினம் இரவு நடந்த விழாவில், 19 கிடாய்கள் வெட்டப்பட்டன. தொடர்ந்து, நேற்று காலை நடந்த விழாவில், 201 ஆட்டு கிடாய்கள் பலியிடப்பட்டு, அந்த பிரிவைச் சேர்ந்த, 2,045 குடும்பத்தினருக்கு, இறைச்சி பங்கிட்டு வழங்கப்பட்டது.