பதிவு செய்த நாள்
01
பிப்
2019
01:02
ஓமலூர்: காளியம்மன் கோவில் பண்டிகையையொட்டி, தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. ஓமலூர் அருகே, குப்பூர் காளியம்மன் கோவில் பண்டிகையையொட்டி, தேரோட்டம், நேற்று (ஜன., 31ல்) நடந்தது.
முன்னதாக, அலங்கரிக்கப்பட்ட உற்சவர் அம்மனை, மேள, தாளத்துடன் கோவிலை வலம் வரச்செய்து, தேரில் ஏற்றச் செய்தனர். தொடர்ந்து, திரளான பக்தர்கள், வடம் பிடித்து, தேரை இழுத்து வந்தனர். அதேபோல், பல்பாக்கி மகா மாரியம்மன் கோவில் பண்டிகையை யொட்டி, தேரோட்டம் நடந்தது. மேலும், காடையாம்பட்டி, பூசாரிப்பட்டி மகா காளியம்மன் பண்டிகையில், ஏராளமான பக்தர்கள், பொங்கல் வைத்து, கரகம், அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். மூலவர் அம்மன், ரூபாய் நோட்டு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.