Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) கேதுவால் சேர்ந்திடும் பொன்னும் பொருளும் கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ... மேஷம்: சேமிப்பு உயரும் மேஷம்: சேமிப்பு உயரும்
முதல் பக்கம் » ராகு கேது பெயர்ச்சி பலன்கள் (21.3.2022 முதல் 8.10.2023 வரை)
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) அலைச்சல் இருந்தாலும் ஆதாயத்துக்கு வழியிருக்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 பிப்
2019
17:16

ராகு 4ம் இடமான மிதுனராசிக்கு வருவதால் பிரச்னை மறையும். அதே நேரம் அலைச்சல், மனக்குழப்பம் ஏற்படலாம். கேது 10ம் இடமான தனுசு ராசிக்கு சென்றுள்ளார். இது சிறப்பானது என சொல்ல முடியாது. அவர் உடல் உபாதைகளை தரலாம். ஆனால் பிற்பகுதியில் அனுகூலத்தைப் கொடுப்பார்.


குருவால் பணப்புழக்கம் அதிகரிக்கும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். 2020 மார்ச் 26ல் 11ம் இடமான மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அப்போது அவரால் பொருளாதார வளம் மேம்படும். ராசிக்கு 10ம் இடத்தில் இருக்கும் சனிபகவானால் பின்னடைவு ஏற்படலாம்.  மொத்தத்தில் ராகுவால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயத்திற்கு குறைவிருக்காது.


2019 பிப்ரவரி –  அக்டோபர்

குடும்பத்தில் கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். புதிய வீடு, மனை வாங்க அதிக முயற்சி தேவைப்படும். குருவின் வக்கிர காலத்தில் தேவை பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும்.


பணியாளர்கள் வேலையில் கவனமாக இருக்கவும். மே 19 முதல் 26 வரை சீரான முன்னேற்றம் இருக்கும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு எதிரிதொல்லை அவ்வப்போது தலைதூக்கும். குருவின் வக்கிர காலத்தில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணலாம்.


கலைஞர்கள் அதிக சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும். மே 19 முதல் அக்.26  வரை  சிறப்பான வளர்ச்சி ஏற்படும்.


அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள்  பலனை எதிர்பார்க்காமல் உழைக்க நேரிடும்.


மாணவர்கள் குருபார்வையால் மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.


விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். அதற்குரிய வருமானம் கிடைக்காமல் போகாது.


பெண்கள் குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது.  மே19க்குப் பின் குடும்ப பிரச்னை, உறவினர் கருத்துவேறுபாடு, வீண்செலவு இருக்காது. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் கைகூடும்.  


2019  நவம்பர் – 2020 ஆகஸ்ட்
குருவின் 5ம் இடத்துப் பார்வை மூலம் எந்த பிரச்னையையும் முறியடிக்கலாம்.  ராகுவால் மனதில் குழப்பம் நிலவும். கணவன், மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். 2020 மார்ச் மாதம் 26க்கு பிறகு முயற்சியில் வெற்றி கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கலாம். பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அரசு பணியாளர்கள் வேலையில் அக்கறையுடன் இருக்கவும். 2020 மார்ச்26க்கு பிறகு புதிய பதவி தேடி வரும்.


வியாபாரிகள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். மறைமுக எதிரிகளால் இடையூறு வரலாம்.2020 மார்ச் 26க்கு பிறகு  வியாபாரம் வளர்முக நிலையில் இருக்கும். புதிய தொழில் முயற்சி வெற்றி பெறும்.


கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற தடைகள் குறுக்கிடலாம். எதிர்பார்த்த புகழ், பாராட்டு பெறுவதில் தாமதம் ஏற்படும்.


அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்காது.  பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும்.


மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். குருவின் பார்வையால் போட்டிகளில் பங்கேற்று வெற்றி காணலாம். 2020 மார்ச்26க்கு பிறகு சிலர்  மேல்படிப்புக்காக வெளிநாடு செல்ல வாய்ப்புண்டு.  


விவசாயிகள் எதிர்பார்த்த மகசூல் கிடைக்க அதிகம் உழைக்க வேண்டியதிருக்கும். புதிய சொத்து வாங்க பொறுத்திருக்க நேரிடும். 


பெண்கள் உளைச்சலுக்கு ஆளாக நேரிடலாம்.  2020 மார்ச் 26க்கு பிறகு உங்களால் குடும்பம் சிறக்கும். கணவனின் அன்பும், ஆதரவும்  கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் நிம்மதியும், திருப்தியும் கிடைக்கும்.  சுயதொழில் புரியும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர்.


பரிகாரம்:
* நவக்கிரகத்தில் ராகு, கேதுவுக்கு அர்ச்சனை
* வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி வழிபாடு
* பவுர்ணமியன்று மாரியம்மனுக்கு மாவிளக்கு.

 
மேலும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் (21.3.2022 முதல் 8.10.2023 வரை) »
temple
அசுவினி:  சிந்தித்து செயல்படுங்கள்இதுவரை ராகு உங்கள் ராசிக்கு 2ம் இடமான ரிஷபத்தில் இருந்து ... மேலும்
 
temple
கார்த்திகை 2-ம் பாதம்: பொருளாதார வளர்ச்சிகடந்த சில ஆண்டுகளாக ராகு, கேதுவால் எந்தவித நற்பலனும் ... மேலும்
 
temple
மிருகசீரிடம் 3,4-ம் பாதம்: உற்சாகம் அதிகரிக்கும் உங்களுக்கு இந்த ராகு-கேது பெயர்ச்சி சிறப்பாக அமையும். ... மேலும்
 
temple
புனர்பூசம் 4-ம் பாதம்: பெண்களால் பிரச்னைஇந்த ராகு, கேது பெயர்ச்சி சுமாரான பலனைத் தரும். இதுவரை 11ம் இடமான ... மேலும்
 
temple
மகம்: பிரச்னைகள் விலகும்இந்த ராகு, கேது பெயர்ச்சி சிறப்பாக அமையும். இதுவரை இந்த கிரகங்கள் திருப்தியற்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.