பதிவு செய்த நாள்
05
பிப்
2019
02:02
கோபிசெட்டிபாளையம்: தை அமாவாசையை முன்னிட்டு, கோபி வட்டார கோவில்களில், ஏராளமான பக்தர்கள் நேற்று (பிப்., 4ல்) சுவாமி தரிசனம் செய்தனர். தை அமாவாசையை முன்னிட்டு, கோபி சாரதா மாரியம்மன் கோவிலில், நேற்று (பிப்., 4ல்) காலை, 6:30 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
இதேபோல், பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில், சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. அம்மன் சன்னதி எதிரேயுள்ள, 60 அடி குண்டத்தில், பெண் பக்தர்கள், தீபமேற்றி வழிபட்டனர். இதேபோல், பச்சமலை முருகன் கோவில், பவளமலை முத்துக் குமாரசாமி கோவிலில், சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.