பதிவு செய்த நாள்
05
பிப்
2019
04:02
பிப்.2 தை 19: சனி மகாபிரதோஷம், மாத சிவராத்திரி, நெல்லை நெல்லையப்பர் பத்திரதீப உற்ஸவம் ஆரம்பம், திருவள்ளூர் வீரராகவர் கருட வாகனம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வரதராஜருக்கு திருமஞ்சனம்
பிப்.3 தை 20: திருவள்ளூர் வீரராகவர் சேஷ வாகனம், மதுரை அழகர்கோயில் கள்ளழகர் தைலக்காப்பு உற்ஸவம், வைத்தீஸ்வரன் கோயில் முத்துகுமாரசுவாமி உற்ஸவம் ஆரம்பம், திருவாவடுதுறை, கல்லிடைக்குறிச்சி, சூரியநயினார் கோயில்களில் சிவன் உற்ஸவம் ஆரம்பம்.
பிப்.4 தை 21: தை அமாவாசை, தீர்த்தக் கரைகளில் தர்ப்பணம் செய்தல், திருவோண விரதம், திருநாங்கூர் பதினொரு கருட சேவை, மதுரை மீனாட்சியம்மன் வைரக்கிரீடம், திருவள்ளூர் வீரராகவர் நாச்சியார் திருக்கோலம், நெல்லை நெல்லையப்பர் ரிஷபவாகனத்தில் பத்திரதீபக் காட்சி
பிப்.5 தை 22: திருவள்ளூர் வீரராகவர் வேணுகோபாலர் திருக்கோலம், சூரியநயினார்கோயில் சிவன் பவனி, திருமயம் ஆண்டாள் எண்ணெய் காப்பு உற்ஸவம், சுவாமிமலை முருகன் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
பிப்.6 தை 23: சந்திர தரிசனம், அப்பூதியடிகள் குருபூஜை, திருவள்ளூர் வீரராகவர் தேர், வைத்தீஸ்வரன் கோவில் முத்துகுமாரசுவாமி வீதியுலா, திருமயம் ஆண்டாள் புறப்பாடு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.
பிப்.7 தை 24: திருவள்ளூர் வீரராகவர் தொட்டித் திருமஞ்சனம், கல்லிடைக்குறிச்சி சிவன் பவனி, திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை, சுவாமிமலை முருகன் வைரவேல் தரிசனம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ராமருக்கு திருமஞ்சனம்
பிப்.8 தை 25: சதுர்த்தி விரதம், வரத சதுர்த்தி, சங்கரன்கோவில் கோமதியம்மன் தெப்பம், மிலட்டூர் விநாயகர் பவனி, தேரெழுந்தூர் ஞானசம்பந்தர் புறப்பாடு, கீழ்த்திருப்பதி கோவிந்தராஜர் ஊஞ்சல் சேவை, திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு, அகோபில மடம் 6வது பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திரம்