ஒருவர் தனக்கு திருமணம் நடக்க இருப்பதாக சொல்ல, “பெண்ணை பார்த்து விட்டாயா?” எனக் கேட்டார் நபிகள். அவர் “இல்லை” என பதிலளித்தார். “முதலில் பெண்ணைப் பார். இதுவே உங்களிடையே அன்பை ஏற்படுத்தும்,” என்றார் நாயகம். “கட்டாயப்படுத்தி ஒரு பெண்ணை திருமணம் செய்ய அனுமதியுண்டா?” என ஒரு பெண் கேட்ட போது, “ பிரியமில்லாதவரை மணக்காதே” என்றார் நாயகம். விதவைப் பெண்ணிடம் ஒப்புதல் பெறும் வரையிலும், கன்னிப்பெண்ணிடம் அனுமதி பெறும் வரையிலும் திருமணம் செய்வது கூடாது. எவ்வாறு அனுமதி பெறுவது என்ற கேள்விக்கு, “பெண்களின் மவுனமே அனுமதியாகும்” என்றார். பெண் பார்த்தபிறகு திருமணம் செய்வதும், பெண்ணின் சம்மதம் பெறுவதும் இல்லறத்தை இனிமையாக்கும்.