உடுமலைப்பேட்டை அருகிலுள்ள பெதப்பம்பட்டி ஆல் கொண்ட மால் கோயிலில் பெருமாள் ஒரு புற்றின் மத்தியில் லிங்க வடிவில் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். ஆலம் உண்ட சிவனின் வடிவில் இருப்பதாலும், ஆலமரங்கள் நிறைந்த வனத்தில் இருப்பதாலும் இவரை ஆல் கொண்ட மால் என்றழைக்கின்றனர். இங்கு வேண்டிக்கொண்டால், கால்நடைகளுக்கு எந்த நோயும் அண்டாது; அதிக அளவில் பசுக்கள் பெருகும்; பால் சுரப்பதில் குறைபாடு இருக்காது என்பது நம்பிக்கை. இக்கோயிலை கால்நடைக் கோயில் என்றும் அழைக்கிறார்கள்.