பதிவு செய்த நாள்
09
பிப்
2019
11:02
திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவில், முடி காணிக்கையின் மூலம், 11.17 கோடி ரூபாய் வசூலானதாக, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி நடக்கிறது. இங்கு, பிரசித்தி பெற்ற, திருமலை ஏழுமலையான் கோவில் உள்ளது. திருமலைக்கு வரும் பக்தர்கள், ஏழுமலையானுக்கு, காணிக்கையாக சமர்ப்பிக்கும் தலைமுடியை, தேவஸ்தானம் ரகம் வாரியாக தரம் பிரித்து, இணையதள ஏலம் மூலம் விற்று வருகிறது.இந்த ஏலம், ஒவ்வொரு மாதமும், முதல் வியாழக்கிழமை நடக்கும். அதன்படி நேற்று முன்தினம் மாலை நடந்த ஏலத்தில், 1.43 லட்சம் கிலோ தலைமுடி விற்பனையானதில், தேவஸ்தானத்திற்கு, 11.17 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.