சென்னையில் நாளை ஹயகீரிவர் ஹோமம்: தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் பங்கேற்கலாம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09பிப் 2019 01:02
சென்னை: வடபழநி ஆதிமூலப்பெருமாள் கோவிலில் மாணவ, மாணவியர் வருகின்ற தேர்வில் வெற்றி பெற்று சிறப்பு மதிப்பெண்கள் பெறவேண்டி, சிறப்பு ஹோமம் நாளை (பிப்.,10ல்) நடைபெறுகிறது.
வடபழநி முருகன் கோவில் அருகில் உள்ளது ஆதிலட்சுமி தாயார் சமேத ஆதிமூலப்பெருமாள் கோவில். அறுநுாறு வருடங்களுக்கு முந்திய இந்தப்பெருமாள் கோவிலில் கடந்த சில வருடங்களாக ஸ்ரீ வித்யா ஹயக்ரீவர் ஹோமம் நடந்துவருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவ-, மாணவியர் வருகின்ற தேர்வில் சிறப்பு மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறவும், படிப்பு, ஞானம், மனோதைரியம், ஞாபசக்தி அதிகரிக்கவும், நல்ல பழக்கவழக்கங்கள் வளரவும், மேல்படிப்பு மற்றும் உத்தியோகம் பெறவும் வேண்டி இந்த ஹோமம் நடைபெறும்.
எந்த வகுப்பு தேர்வு எழுதப்பபோகும் குழந்தைகள் இதில் கலந்து கொள்ளலாம் என்றாலும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்வு எழுதப்பபோகும் மாணவர்களுக்கு இந்த யாகம் அவர்களது தேர்வு பயத்தை போக்கி நன்மைதரும். இந்த யாகத்தில் தங்கள் பிள்ளைகளுடன் பெற்றோர்கள் கலந்துகொள்ளலாம் மேலும் ஆசிரியர்கள் பக்தர்களும் பெருந்திரளாக கலந்துகொண்டு மாணவ செல்வங்களை ஆசீர்வதிக்கலாம்.
காலை 10 மணியில் இருந்து 11:30 மணிவரை நடைபெறும் ஹோமத்தில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு ஹயக்ரீவர் படத்துடன் கூடிய கையில் கட்டக்கூடிய கயிறும் பேனாவும் இலவசமாக வழங்கப்படும். இந்த சிறப்பு யாக பூஜையில் கலந்து கொண்டு ஆதிமூலப்பெருமாள், ஹயகீரிவர்,ராமானுஜர் திருவருள் பெறவரும்படி கோவில் நிர்வாகிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.