பதிவு செய்த நாள்
13
பிப்
2019
11:02
விழுப்புரம்:விழுப்புரம் ஜனகவல்லி சமேத வைகுண்டவாச பெருமாள் கோவிலில் நேற்ற ரதசப்தமி மகோற்சவ பெருவிழா நடந்தது.விழாவையொட்டி, நேற்று அதிகாலை 5:00 மணிக்கு விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
பின்னர், 6:00 மணிக்கு சூரிய பிரபை வாகனத்திலும், 9:00 மணிக்கு அனுமந்த வாகனத்திலும், 10:30 மணிக்கு சேஷ வாகனத்திலும், பகல் 12:30 மணிக்கு கருட வாகனத்திலும், மாலை 4:00 மணிக்கு இந்திர விமானத்திலும், 5:30 மணிக்கு கற்பக விருட்சத்திலும், இரவு 7:00 மணிக்கு சந்திர பிரபையிலும் வைகுண்டவாச பெருமாள் சிறப்பு புஷ்ப அலங்காரம் மூலம் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் ஆலய உட்பிரகாரம் உலா வந்தார். விழா ஏற்பாடுகளை, அப்பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் ரதசப்தமி வைபவத்தையொட்டி, நேற்று அதிகாலை விஸ்வரூப தரிசனம், சுப்ரபாத சேவை ஆகியவைகளுக்குப்பின் ஸ்ரீதேவி, பூதேவி, பெருமாள் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேக பூஜை செய்து வைக்கப்பட்டது.மாலையில் கோவில் உட்பிரகாரம் வலம் சென்று மண்டபத்தில் எழுந்தருளச் செய்தனர். சேவை, சாற்றுமுறை பூஜைகளுக்குப்பின் தேசிக பட்டர் ரதசப்தமி வைபவத்தின் நோக்கம் குறித்து பக்தர்களுக்கு விளக்கினார். பின் தீப ஆராதனைகளுக்குப்பின் பக்தர்கள் வழிபட்டனர்.