Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கீழப்பெரும்பள்ளத்தில் கேது ... மாசிமாதப்பிறப்பு:  பழநியில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் மாசிமாதப்பிறப்பு: பழநியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மனித வாழ்வின் முதல் காதல் காவியம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மனித வாழ்வின் முதல் காதல் காவியம்

பதிவு செய்த நாள்

14 பிப்
2019
11:02

ராதா நந்தவன்னைச் சேர்ந்தவள். இளம் வயதிலேயே கிருஷ்ணனும், ராதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் காதல் வயப்படுகின்றனர். பிரம்மா இவர்கள் காதலை ஏற்று, திருமணம் செய்து வைத்ததாக ஒரு தகவல் கூறுகிறது. பத்து வயதுக்கு மேல் கிருஷ்ணன் துவாரகைக்குப் புறப்பட்டு விடுகிறான்! ராதையோ துவாரகைக்குச் செல்லவேயில்லை! ஆனால் ராதையின் காதலும், ராதையின் மேல் கிருஷ்ணன் கொண்ட காதலும்தான் இன்று வரை அமர காவியமாகப் பேசப்படுகிறது. அவனும் ராதா கிருஷ்ணன் என்றே அழைக்கப்படுகிறான்.

கோகுலம்.. கோவர்தன்.. நந்தவன் உட்பட்ட பகுதிகள் இன்றும் ராதாகிருஷ்ணனின் காதல் லீலைகளை நினைவாக்கும் பகுதிகள். பிருந்தாவனில் உள்ள பல கோயில்கள் ராதா, கிருஷ்ணன் சார்ந்தவை. இந்த ராதா கிருஷ்ணனின் காதல், மனித வாழ்வின் முதல் காதலின் அருமையை உலகிற்கு உணர்த்துகிறது. அதுதான் நிஜமாகப் போற்றப்பட்ட வேண்டிய காதல் எனவும் நினைவுபடுத்துகிறது!

ராதாவோ சிவப்பு. கிருஷ்ணனோ கருப்பு. இதனால் கிருஷ்ணனுக்கு. ராதா தன்னை காதலிப்பாளா என்று தன்னிரக்கம்! தன் தாயிடம் தன் மனக்குறையைக் கேட்கிறான் கிருஷ்ணன்! அவன் தாயோ. ராதா உன் மீது மாறாத அன்பு பூண்டிருக்கிறாள். சந்தேகமாய் இருந்தால் சோதித்துப்பாரேன் எனத் தூண்டுகிறாள்! கிருஷ்ணனுக்கும் அதனை அறியத்தானே ஆசை. அதனால் கருப்பு வண்ணப் பொடியை எடுத்துச் சென்று ராதா அசந்த நேரத்தில், அவள் முகத்தில் பரப்புகிறான். கிருஷ்ணன் எதிர்பார்த்தது. உடனே ராதா கடும் கோபம் கொண்டு தன்னை விரட்டுவாள் என! ஆனால் ராதாவோ, தன் முகம் கருப்பானது கண்டு சந்தோஷப்படுகிறாள். ஆஹா.... இனி உனக்கு என் காதல் மீது சந்தேகம் எழாது, ஏனென்றால் நீயும் கருப்பு.... நானும் கருப்பு என்கிறாள். ராதாவின் காதலைப் புரிந்து கொண்ட கிருஷ்ணன், உடனே தயாராய் வைத்திருந்த மேலும் பல வண்ணப் பொடிகளையும் தெளிக்கிறான்.

கிருஷ்ணன் மீது காதல் வயப்பட்ட ராதாவோ.. கோபப்படுவதற்குப் பதில், சிரித்தாள். மேலும் சிரித்து கிருஷ்ணனை மேலும் ஆட்கொண்டாள். அங்கு காதல் வெற்றியடைந்தது! காதலுக்கு வண்ணம் ஒரு பொருட்டல்ல! காதலுக்கு எல்லையில்லை என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது!

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar