பதிவு செய்த நாள்
14
பிப்
2019
12:02
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயிலில் ராகு, கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை நடந்தது. உத்தமபாளையம் முல்லையாற்றங்கரையில் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானம்பிகை கோயில் உள்ளது. இங்கு ராகு, கேது தனி சன்னதியில் தம்பதி சகிதமாக எழுந்தருளியுள்ளனர். காலசர்ப்ப தோஷ நிவர்த்தி தலமாக கருதப்படுகிறது. தென்காளஹஸ்தி எனவும் அழைக்கப்படுகிறது. ராகு பகவான் கடகத்திலிருந்து மிதுனத்திற்கும், கேது பகவான் மகரத்திலிருந்து தனுசு ராசிக்கும் நேற்று மதியம் 2:00 மணியளவில் பெயர்ச்சியானார். பரிகார ராசிக்காரர்கள் ராகு, கேது பகவான் சன்னதியில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் பங்கேற்று, அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர். அன்னதானம் நடைபெற்றது.
கூடலுார்: ராகு, கேது பெயர்ச்சியை முன்னிட்டு கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. அபிஷேகம் மற்றும் ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். ராசிக்கேற்ப பூஜைகள் நடத்தப்பட்டன. பலன்கள் குறித்து விளக்கப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது.
பெரியகுளம்: ஞானாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரர் கோயிலில், ராகு– கேது பெயர்ச்சி நடந்தது. ஹோம பூஜையை தொடர்ந்து மதியம் 2:02 மணிக்கு ராகு, கடக ராசியிலிருந்து மிதுன ராசிக்கும், கேது, மகரத்தில் இருந்து தனுசுக்கும் இடம் பெயர்ந்தார். ராகு கேது பகவான் சன்னதியில் பூஜை, பரிகார பூஜை செய்யப்பட்டது. உற்சவர்கள், காளஹஸ்தீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். அர்ச்சகர் கணஷேன் தலைமையில் பூஜைகள் நடந்தது. திரளானோர் பங்கேற்றனர்.
* கம்பம் ரோடு காளியம்மன் கோயிலில் காளியம்மன், தட்சிணா மூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். நவக்கிரகங்களுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை ஸ்ரீ குருதட்சிணாமூர்த்தி சேவா சங்கம் ஆலோசகர் சி.சரவணன், உறுப்பினர்கள் செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பிரசாதம் வழங்கப்பட்டது.