பதிவு செய்த நாள்
14
பிப்
2019
01:02
தொண்டாமுத்தூர்:ஆலாந்துறை, நாகசக்தி மையத்தில், ராகு கேது பெயர்ச்சியை ஒட்டி, 108 கலச வேள்வி பூஜை நடந்தது.
நவகிரகங்களில் உள்ள மிக முக்கிய கிரகங்கள், ராகு மற்றும் கேது. இந்தாண்டு, ராகு கேது பெயர்ச்சி நேற்று (பிப்., 13ல்) நடந்தது. நேற்று (பிப்., 13ல்) பகல், 2:02 மணிக்கு, ராகு, கடக ராசியில் இருந்து, மிதுன ராசிக்கும், கேது, மகர ராசியில் இருந்து, தனுசு ராசிக்கும் பெயர்ச்சி அடைந்தனர்.இதனையடுத்து, அனைத்து கோவில்களிலும், சிறப்பு பூஜைகள் நடந்தன.
ஆலாந்துறையில் உள்ள நாகசக்தி மையத்தில், ராகு, கேது பகவான்களுக்கு என்று, தனியாக கோவில் உள்ளது. ராகு, கேது பெயர்ச்சியை ஒட்டி, கணபதி பூஜை, 108 கலச வேள்வி பூஜை நடந்தது.அதனையடுத்து, ராகு, கேது பகவான்களுக்கு, பாலபிஷேகம் நடந்தது. இங்கு, 27 நட்சத்திரங்களுக்கும் தனித்தனியாக மரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அந்தந்த நட்சத்திரம் உடையவர்கள், அந்த மரத்துக்கு நீர் ஊற்றி வணங்கினர்.ஸ்ரீராம் சிவாச்சாரியர் தலைமையில், வேதமந்திரங்கள் முழங்க, பரிகார பூஜைகளும் நடந்தது. இந்நிகழ்ச்சியில், 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.