பதிவு செய்த நாள்
18
பிப்
2019
05:02
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, சுவாமி தரிசனம் செய்கின்றனர். அவ்வாறு
வரும் பக்தர்களுக்கு, பவுர்ணமி தோறும், அருணாசலேஸ்வரர் கோவில் தச்சொலி மண்டபத்தில், மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. கடந்த, பவுர்ணமி மாதத்தில் நடந்த மருத்துவ முகாமின்போது, பயன்படுத்தப்பட்ட மருத்துவ கழிவுகளை அகற்றப்படாமல், மண்டபத்திலேயே வைக்கப்பட்டுள்ளது. அங்கு, தேங்காய் நார்க்கழிவுகள் உள்ளிட்ட குப்பை அகற்றப்படாததால், துர்நாற்றம் வீசுகிறது. இதை அகற்றி, கோவில் வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.