பதிவு செய்த நாள்
18
பிப்
2019
05:02
நகரி:நகரி அடுத்த, சத்திரவாடா கிராமத்தில் சிவகாமி சுந்தரி சமேத சிதம்பரஸ்வரர் சுவாமி கோவிலில் உள்ள சன்னதி விநாயகருக்கு கும்பாபிஷேகம் நேற்று (பிப்., 17ல்) நடந்தது.நேற்று முன்தினம் (பிப்., 16ல்)கோவில் வளாகத்தில், மூன்று யாக சாலை மற்றும் கலசங்கள் வைத்து, கணபதி ஹோமம் மற்றும் நான்கு யாகசாலை பூஜை நடந்தது.நேற்று (பிப்., 17ல்), காலை, 10:00 மணிக்கு, சன்னதி விநாயகர் மூலவர் விமானத்தின் மீது, கலசநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
அதை தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை, உற்சவர் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு
அருள்பாலித்தார்.