Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குங்குமத்தின் மகிமை நோய் தீர்க்கும் மாமருந்து
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இசையரசியின் தர்பார்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2019
04:02

இசைவிமர்சகர் ஒருவர் தன் நுட்பமான விமர்சனங்களால் ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக இருந்தார். அவர் எழுதிய இசைவிமர்சனப் புத்தகத்தின் முதல்பிரதியை காஞ்சி மகாசுவாமிகளிடம் கொடுத்து ஆசி பெற வந்தார். அவரிடம் பேசிய சுவாமிகள், தன்னை சந்திக்க பக்தர்கள் காத்திருப்பதால், ”நீ உடனே காமாட்சியம்மனை தரிசித்து  வா. பிறகு சாவகாசமாக பேசலாம். அங்கே தர்பார் நடக்கிறது.


முடிவதற்குள் போ” என்றார். அப்போது நவராத்திரி விழா என்பதால் காமாட்சியம்மன் கோயிலில் விமரிசையாக விழா நடந்து கொண்டிருந்தது. காமாட்சியம்மனுக்கு செய்யும் விசேஷ அலங்காரத்தில் தர்பாரும் ஒன்று. மகாராணியாக கிரீடம் சூடியபடி ராஜசபையில் கொலுவிருப்பது போல் செய்யப்படும் அலங்காரம் இது. இசைவிமர்சகர் வேகமாக கோயிலுக்கு சென்றார். அங்கு வழக்கமான அலங்காரத்தில் அம்மனை தரிசித்தார். ’அம்மன் தர்பாரில் இல்லையே? பின்னர் ஏன் தர்பார் முடிவதற்குள் போகச் சொன்னார் சுவாமிகள்?” என யோசித்தார் விமர்சகர் அப்போது மகாசுவாமிகளின் பக்தையான இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமியின் இனிய குரல் காற்றில் தவழ்ந்து காதில் தேனாக தித்தித்தது. அன்று நவராத்திரி விழாவில் எம்.எஸ். ஸின் கச்சேரி. அவர் பாடியது  தியாகராஜ சுவாமிகள் எழுதிய சூயோசனா கமல லோசனாசூ என்ற தர்பார் ராகத்தில் அமைந்த பாடல்.  ”ஆஹா...! அலங்காரம் என்று நினைத்தோமே! தர்பார் ராகத்தை அல்லவா சுவாமிகள் சொல்லியிருக்கிறார்! பாடல் முடிவதற்குள், தான் அதைக் கேட்க வேண்டும் என்பதையே ’தர்பார் முடிவதற்குள் போ’ என்று  துரிதப்படுத்தினார் போலும்! சுவாமிகள் சொன்னதன் அர்த்தம் இப்போதல்லவா புரிகிறது! என மகிழ்ந்தார்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

உயிர்களை நேசி செப்டம்பர் 29,2026

* உயிர்களை நேசி. அப்போது தான் அவனின் கருணையை பெறுவாய். * ஒருவரின் குணத்தை அறிய விரும்பினால் அவரது நண்பரை ... மேலும்
 

வேண்டாமே ஆணவம் செப்டம்பர் 29,2026

பலர் கூடும் இடத்தில் ஆடம்பர ஆடை அணிந்து இறுமாப்புடன் நடந்தார் ஒருவர்.  ‘நான்’ என்னும் அகந்தை அவரது ... மேலும்
 

பசித்தவருக்கு உணவிடு செப்டம்பர் 29,2026

பசி மிக கொடுமையானது. பசி வந்தால் மனம், உடல் என்ன பாடுபடும் தெரியுமா... பசித்தவருக்கு உங்களால் ... மேலும்
 

காத்திருக்கு பதவி செப்டம்பர் 29,2026

* உங்கள் குழந்தைகளுக்கு முத்தம் கொடுங்கள். ஒவ்வொரு முத்தத்திற்கும் சொர்க்கத்தில் பதவி ... மேலும்
 

நுாறில் ஒரு பங்கு செப்டம்பர் 29,2026

இறைவன் அன்பை நுாறாகப் பங்கிட்டான். அதில் 99 பங்கைத் தன்னிடம் வைத்துக் கொண்டான். மீதியிருக்கும் ஒரு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar