பதிவு செய்த நாள்
21
பிப்
2019
01:02
பழநி: மாசித் திருவிழாவை முன்னிட்டு, பழநி மாரியம்மன் கோயில்தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் புதிய தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலை சேர்ந்த மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா பிப்., 1 முதல் 21 வரை நடக்கிறது. நேற்று முன்தினம் (பிப்., 19ல்) திருக்கல்யாணம் நடந்தது. நேற்று (பிப்., 20ல்) தேரோட்டத்தை முன்னிட்டு, இக்கோயிலுக்கென புதிதாக உருவாக்கிய தேரில், மாரியம்மன் பாதிரிப்பிள்ளையார் கோயிலில் எழுந்தருளினார்.
(இதுவரை பெரியநாயகி அம்மன் கோயில் தேர் தேரோட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டது)
மாலை 4:30 மணிக்கு தேரோட்டம் ஆரம்பமானது. தேரின் மீது பழங்களையும், நவதானியங் களையும் பக்தர்கள் வீசினர். மாலை 5:45 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது. இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். இரவில் பக்தர்கள் பெண்வேடம், பூதம் உள்ளிட்ட வேடமிட்டு வண்டிக்கால் பார்த்தலும், நள்ளிரவில் திருக்கம்பத்தை கங்கையில் சேர்க்கும் நிகழ்ச்சியும் நடந்தது.
இன்று (பிப்., 21ல்) இரவு மாரியம்மன் வெள்ளிக் காமதேனு வாகனத்தில் உலா வருதல் நடக்கிறது. அதன்பின் கொடி இறக்குதலுடன் விழா நிறைவடைகிறது.