பதிவு செய்த நாள்
25
பிப்
2019
12:02
ஈரோடு: வெள்ளோடு ராசாகோவில் நன்னீராட்டு விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பெருந்துறை தாலுகா, தென்முகம் வெள்ளோடு கிராமத்தில், ராசாசுவாமி கோவில் உள்ளது. இங்குள்ள நல்ல மங்கையம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, நன்னீராட்டு விழா நேற்று நடந்தது.
அதிகாலை யாகசாலையில் இருந்து, கலசங்கள் ஆலய வலம் வந்தன. தொடர்ந்து, 6:00 மணி முதல், 7:45க்குள், மூலவர் ராசாசுவாமி, நல்ல மங்கையம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களான, கன்னிமூல கணபதி, கன்னிமார்சுவாமி, மசிரி அம்மன், தொரட்டி அம்மன், உச்சண்ணன், சார்க்கணன், உச்சக் குமாரசுவாமி, பெரியண்ண சுவாமி, கோயில் ஐயன், ஆத்தாள், கருப்பண்ணசுவாமி, முனியப்பன் சுவாமி மற்றும் சாம்புவன் தெய்வங்களுக்கு திருக்குட நன்னீராட்டு நடந்தது. கோவை சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், ராசா கோவில் தலைவர் அருணாசலம், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சாத்தந்தை குலத்தினர், ஆயிரக்கணக்கில் மக்கள் கலந்து கொண்டனர்.