திரக்கனுார்: வம்புப்பட்டு முத்து மாரியம்மன் கோவில் மகாகும்பாபிஷேகம் நேற்று நடந்தது. திருக்கனுார் அடுத்த வம்புப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள முத்து மாரியம்மன், கணபதி, முருகன், அய்யனாரப்பன், பொறையாத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 22ம்தேதி காலை 7:30 மணிக்கு கணபதி ஹோமம், கோபூஜையுடன் துவங்கியது. நேற்று முன்தினம் காலை 8:30 மணிக்கு யாக வேள்விகள், 108 வகையான மூலிகை பொருட்களால் ஹோமம் நடந்தது. முக்கிய நிகழ்வாக, நேற்று காலை 7:30 மணிக்கு நாடி சந்தனம், மூல மந்திர ஹோமம், கடம் புறப்பாடாகி காலை 9:00 மணிக்கு அய்யனாரப்பன், பொறையாத்தம்மன் கோவில்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு முத்து மாரியம்மன் கோவில் விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.