பதிவு செய்த நாள்
25
பிப்
2019
01:02
சேலம்: விநாயகர் கோவில் சீரமைக்கப்பட்டு, புதிய சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. சேலம், அணைமேடு, திருமணிமுத்தாறு தென்கரையில், சவுராஷ்டிரா சமூக மக்கள் பயன்பாட்டில், விநாயகர் கோவில் உள்ளது. கடந்தாண்டு ஜூன், 4ல், விநாயகர் சிலையை, மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்து, அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர். தடுப்புச்சுவர், கதவுகள் இல்லாததால், சிலை திருடுபோனதால், கோவிலை உயர்த்தி, சுற்றுச்சுவர் எழுப்பினர். நேற்று முன்தினம், விநாயகர் சிலை பிரதிஷ்டை விழா தொடங்கியது. நேற்று காலை, யாகசாலை பூஜைக்கு பின், புனிதநீரால் அரச மரத்துக்கு அபிஷேகம் செய்து, சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, விநாயகர் சிலைக்கு, திருமணி செல்வவிநாயகர் என பெயரிட்டு, பட்டாச்சாரியார்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை, சேலம் சவுராஷ்டிரா வித்யாசபை மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.