ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி சிவராத்திரி விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று சுவாமி சன்னதி முன்புள்ள கொடி கம்பத்தில் மேஷ லக்னத்தில் கோயில் குருக்கள் மந்திரம் முழங்க நேற்று காலை 9:50 மணிக்கு கொடி ஏற்றினர்.அலங்கார கோலத்தில் காட்சியளித்த சுவாமி, பர்வதவர்த்தினி அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.தொடர்ந்து 12 நாட்கள் கோயிலில் நடக்கும் விழா நாட்களில் சுவாமி, அம்மன் தங்கம், வெள்ளி வாகனத்தில் வீதி உலா நடக்கிறது. மாசி சிவராத்திரி மார்ச் 4ல் சுவாமி சன்னதியில் சிறப்பு பூஜை, வெள்ளி ரத வீதி உலா நடக்கிறது.