பதிவு செய்த நாள்
26
பிப்
2019
11:02
மயிலாடுதுறை: ஆலங்குடி அருகே, ஞானபுரீ மங்களமாருதி கோவிலுக்கு நேற்று வந்த, சகடபுரம் ஸ்ரீ வித்யாபீடம் ஸ்ரீவித்யா அபினவ கிருஷ்ணாநந்த தீர்த்த மகா சுவாமிகள், திருப்பணிகளை விரைந்து முடித்து, கும்பாபிஷேகம் நடத்த அறிவுறுத்தினார்.
திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி அருகே, ஞானபுரீ என்ற இடத்தில், சங்கடஹர ஸ்ரீ மங்களமாருதி கோவில் அமைந்து உள்ளது. தற்போது, ஸ்தாபகர் ரமணி அண்ணா தலைமையில், அறங்காவலர்கள் கே.வெங்கட்ராமன், ஜெகன், ராகவன் ஆகியோரால், கோவிலில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஸ்ரீஜகத்குரு பதரி சங்கராச்சாரியார் சமஸ்தானம், சகடபுரம் ஸ்ரீவித்யாபீடம் ஸ்ரீவித்யா அபினவ ஸ்ரீ கிருஷ்ணாநந்த தீர்த்த மகா சுவாமிகள், ஞானபுரீ சங்கடஹர மங்கள மாருதி கோவிலுக்கு நேற்று வந்து, தரிசனம் செய்தார். அவருக்கு, ரமணி அண்ணா தலைமையில், பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது.தொடர்ந்து, பக்தர்களுக்கு அருளாசி வழங்கிய கிருஷ்ணா நந்த தீர்த்த மஹா சுவாமி, ரமணி அண்ணா முன்னிலையில், திருப்பணிகளை விரைந்து முடித்து, கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டார்.