பதிவு செய்த நாள்
26
பிப்
2019
01:02
கமுதி : கமுதி அருகே கோட்டைமேட்டில் கோட்டை முனீஸ்வரர் கோயில் 42 வது ஆண்டு மாசி களரி விழாவை முன்னிட்டு டி.எஸ்.பி., சண்முகசுந்தரம் தலைமையில் காப்புகட்டு, கொடி ஏற்றத்துடன் விழா துவங்கியது. கமுதி அருகே கோட்டைமேடு தனி ஆயுதப்படை நிர்வாகம், கிராம மக்கள் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் நடைபெறும் கோட்டை முனீஸ்வரர் கோவில் 11 நாள் மாசி களரி திருவிழா காப்பு கட்டுடன் துவங்கியது.
டி.எஸ்.பி., சண்முகசுந்தரம், கமுதி தனி ஆயுதப்படை இன்ஸ்பெக்டர்கள், போலீசார்கள், மற்றும் கமுதி, கோட்டைமேடு உள்ளிட்ட சுற்று வட்டார பகுதி கிராம மக்கள் கலந்து கொண்டனர். பின்னர் கோட்டை முனீஸ்வரர், செல்வ விநாயகர், பாலமுருகன், சக்கம்மாள் ஆகிய கோயில்களில் சிறப்பு அலங்காரம், அபிஷேகம், பூஜைகள், தீபராதனைகள், சிறப்பு விஷேச பூஜைகள் நடந்தது. மாசி களரி திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை, மதியம், இரவு நேரங்களில் சிறப்பு விஷேச பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.