பதிவு செய்த நாள்
26
பிப்
2019
01:02
திண்டிவனம்: திண்டிவனம் வாசவி கிளப் இண்டர்நேஷனல் சார்பில், உலக அமைதி வேண்டி சிறப்பு பூஜை நடந்தது. திண்டிவனம் அடுத்த கருவம்பாக்கத்தில் உள்ள தரம்சந்த் ஜெயின் பள்ளியில், வாசவி கிளப்ஸ் இண்டர்நேஷனல் சார்பில், உலக அமைதி வேண்டி, நேற்று முன்தினம் லக்ஷ பசுபு கொம்மு நோமுலு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், புதுச்சேரி, சென்னை, கடலுார், விழுப்புரம், கோயம்புத்துார், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆர்ய வைஸ்ய சமூகத்தில் இருந்து 2,500 பெண்கள் பூஜையில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், வாசவி இண்டர்நேஷனல் சேர்மன் வசந்தம் ராமதாஸ், அகில உலக வாசவி கிளப் தலைவர் வேமுலா ஹஜராத்திக் குப்தா, திண்டிவனம் பி.ஆர்.எஸ்., துணிக்கடை உரிமையாளர் ரங்கமன்னார், ராம்டெக்ஸ் உரிமையாளர்கள் தியாகராஜன், வெங்கடேசன், சாந்தி பாபு ரமேஷ், வாசவி கிளப் இண்டர்நேஷனல் தலைவர் சிவக்குமார், வாசவி கிளப் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.