ராமேஸ்வரத்தில் மாசி சிவராத்திரி விழா: சுவாமி, அம்பாள் வீதி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27பிப் 2019 11:02
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 2ம் மாசி சிவராத்திரி விழாவையொட்டி சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் வீதி உலா வந்தனர்.
மாசி சிவராத்திரி விழாவையொட்டி, பிப்.,25ல் ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி சன்னதி முன்புள்ள கொடி கம்பத்தில் விழா கொடி ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து கோயிலில் 12 நாட்கள் மாசி சிவராத்திரி விழா நடக்கும். 2ம் நாள் விழாவான நேற்று காலை 9 மணிக்கு, கோயிலில் இருந்து சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க கேடயத்தில் எழுந்தருளி, கோயில் ரதவீதியில் உலா வந்தனர். அப்போது வீதியில் கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி, அம்மனை தரிசித்தனர்.