நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு கைலாசநாதர், சி.என்.பாளையம் மலையாண்டவர், சொக்கநாதர் ஆகிய கோவில்களில் மாசிமாத தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது. நடுவீரப்பட்டு காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர் கோவில், சி.என்.பாளையம் மீனாட்சி அம்மன் சமேத சொக்கநாதர், மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் ஆகிய கோவில்களில் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது.பூஜையை முன்னிட்டு நேற்று இரவு 7:00 மணிக்கு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு 8:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. காலபைரவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவரை வழிபட்டனர்.