Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இங்கே இருப்பது அன்பு மட்டுமே! தில்லைஅம்பல நடராஜா
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆள்பார்த்து பேசணும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2019
05:03

ஒரு அறிஞருக்கு இலக்கண சுத்தமாகப் பேசுபவர்களை மிகவும் பிடிக்கும். மாற்றிப் பேசுபவர்களைக் கண்டால் கோபப்படுவார்.ஒருநாள் இரவில், அவர் ஒரு கிணற்றுக்குள் விழுந்து விட்டார். உள்ளே தண்ணீர் இல்லை. அடிப்பாகத்தில் மணல் கிடந்ததால், காயமில்லாமல் தப்பி விட்டார். ஆனால், வெளியே வரும் உபாயம் தெரியவில்லை. ‘‘யாராவது என்னைக் காப்பாற்றுங்கள்,” என்று ஓலக்குரல் இட்டார்.


இதை அவ்வழியாகச் சென்ற ஒருவன் இதைக் கேட்டான்.கிணற்றுக்குள் எட்டிப்பார்த்தான். அவனால், அவரை தனியாக மீட்க முடியாதென புரிந்து விட்டது. ‘‘ஐயா! சற்றுப் பொறுங்கள். ஊருக்குள் சென்று உதவிக்கு ஆட்களைக் கூட்டி வருகிறேன். இருளாக வேறு இருக்கிறது. விளக்கிற்கும் ஏற்பாடு செய்கிறேன்,” என்றான்.ஆபத்தில் கிடந்தவர், “நன்றியப்பா! விரைந்து வா,” என்று சொல்லியிருந்தால் பரவாயில்லை. யாரிடம் என்ன சொல்வது என்று இல்லாமல்,

“தம்பி! நீ பேசியதில் இலக்கணப்பிழை இருக்கிறது. ‘ஆட்களைக் கூட்டி வருகிறேன்’ என்பது நிகழ்காலம். ‘கூட்டி வருவேன்’ என்றால் தான் எதிர்காலம். எதிர்காலத்தில் நடக்கப் போவதை, நிகழ்காலமாக்கி விட்டாயே,” என்றார்.‘‘சரி சாமி! முதலில், எப்படி பேச வேண்டும் என இலக்கண வல்லுநர்களிடம் போய் கற்றுக் கொண்டு, அதன் பிறகு ஆட்களை கூட்டி வருகிறேன்,” என சொல்லிவிட்டு அவன் போய் விட்டான்.எந்த நேரத்தில் என்ன தேவையோ, அதைத்தான் பேச வேண்டும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar