நெகமம்:நெகமம் நாகர் மைதானம் அருகேயுள்ள, மாகாளியம்மன் கோவிலில் கடந்த மாதம், 19ம் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா துவங்கியது.கடந்த, 21ம் தேதி அம்மன் அழைப்பு, அலங்கார பூஜை நடந்தது. கடந்த, 27ம் தேதி மாவிளக்கு பூஜையை தொடர்ந்து, அம்மனை வேண்டி பூவோடு எடுக்கும் நிகழ்வும் நடந்தது. அன்னதானமும், அம்மன் திருவீதி உலாவும் நடந்தது. நேற்று முன்தினம், சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் திருவிழா நிறைவு பெற்றது.