சாபத்தின் காரணமாக ஆதிசேஷன், ராகு, கேது உள்ளிட்ட நாகங்கள் ஒருமுறை சக்தியை இழந்தன. மீண்டும் சக்தி பெற சிவனைச் சரணடைந்தன. சிவராத்திரியன்று பூலோகத்தில் உள்ள நான்கு சிவத்தலங்களில் வழிபடும்படி அவர் தெரிவித்தார். ஆதிசேஷன், ராகு, கேது, அனந்தன், வாசுகி, தட்சன், கார்க்கோடகன், சங்கபாலன், குளிகன், பத்மன், மகாபத்மன் என நாகங்கள் பூலோகம் வந்தன. முதல் கால பூஜையில் கும்பகோணம் நாகேஸ்வரர், இரண்டாம் கால பூஜையில் திருநாகேஸ்வரம் நாகநாதர், மூன்றாம் கால பூஜையில் திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர், நான்காம் கால பூஜையில் நாகூர் நாகநாதரை வழிபட்டு விமோசனம் பெற்றன. இத்தலங்களை வழிபட இழந்த செல்வம் மீண்டும் கிடைக்கும்.