நபிகள் நாயகத்தைப் பார்க்க வந்த நண்பர் ஒருவர், தனக்கு தெரிந்த ஒருவரை புகழ்ந்து கூறினார். அவர் செய்த நற்செயல்களுக்காக நிச்சயம் சுவனத்திற்கு (சொர்க்கம்) செல்வார் என்றார். “நீர் உம் சகோதரரின் கழுத்தை அறுத்து விட்டீர்” என்று நபிகள் கூற நண்பர் அதிர்ந்தார். “மனிதர்கள் ஒருவரை புகழ வேண்டும் என்றால் புகழட்டும். ஆனால் இறைவன் ஒருவனே உண்மையை அறிவான்”என்று தெளிவுபடுத்தினார். அதாவது ஒரு மனிதர், புகழ்ச்சிக்குரியவர் என்றாலும் கூட, ’அவர் நல்லவர்’ என்ற அளவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். அவரை அதிகமாக புகழக்கூடாது. சொர்க்கத்துக்கு செல்வார் என்றெல்லாம் சொல்லும் உரிமை நமக்கில்லை.