ஒருமுறை நாயகத்தை பணக்கார நண்பர் ஒருவர் பார்க்கச் சென்றார். அவர் தரம் குறைந்த ஆடைகளை அணிந்திருந்தார். அவரிடம், “நீர் பணக்காரர் தானே?” எனக் கேட்டார். அவர். “ஆம்! இறைவன் எனக்கு ஆடுகள், பசுக்கள், ஒட்டகங்கள் என ஏராளமான செல்வம் தந்துள்ளான்” என்றார். உடனே, “இறைவன் செல்வம் கொடுத்திருந்தால் அவரது அருளின் அடையாளம் உடலில் வெளிப்பட்டிருக்க வேண்டும்,” என்றார். அதாவது கஞ்சத்தனமாக சேர்த்து வைப்பது இறைவன் செய்த நன்றியை மறப்பதாகும்.