உன்னால் முடியும் தம்பி உனக்குள் இருக்கும் உன்னை நம்பி!!!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மார் 2019 03:03
* யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள். உழைப்பின் மூலம் சொந்தக் காலில் நிற்கப் பழகுங்கள். * பிறர் குற்றம் சொல்லும் விதத்தில் நடக்காதீர்கள். கடமையைக் கண்ணாக மதியுங்கள். * கற்ற நல்ல விஷயங்களை வாழ்வில் கடைபிடிப்பவனே அறிவாளி. * செல்வமும் ஆயுளும் தாமரை இலை தண்ணீர் போல, நம்மை விட்டு ஓடி விடும். * போதும் என்ற எண்ணம் இல்லாதவன் எதையோ இழந்தவன் போல அலைந்து கொண்டிருப்பான். * மரணத்தைக் கண்டு அஞ்சாத மனிதனே மாவீரன். சோம்பலை விட்டு விலகியவனே மகாசூரன். * மனிதன் பழி பாவத்திற்கு அஞ்சி நடக்க வேண்டும். குற்றமில்லாத வாழ்வே உயர்வுக்கு வழிவகுக்கும். * தூக்கத்தில் இருந்து எழுவதை விட, அறியாமை என்னும் தூக்கத்தில் இருந்து எழுவது அவசியம். * நல்லவர் நட்பால், எல்லா நன்மைகளையும் அடையலாம். - தைரியமூட்டுகிறார் ஜெயேந்திரர்