* கடவுள் ஒருவரே மேலானவர். நாம் அவரது பணியாளனாக இருப்பது மதிப்பிற்குரியது. * கடவுளின் கண்ணுக்கு அற்பமானது எதுவுமே இல்லை. விவேகமுள்ள சிறந்த நண்பன் கடவுள் ஒருவரே. * கடவுள் அளிக்கும் வாய்ப்புகளை பயன்படுத்துங்கள். வாழ்வு நிச்சயம் பிரகாசிக்கும். * கண்ணனை வணங்கு பவர்களுக்கு அகங்காரமும் சுயநலமும் மறைந்து அன்பு பிறக்கும். * நம்பிக்கையே ஆதாரம். தீவிர ஆர்வத்துடன் தெய்வ சக்தியை துணை கொண்டால் எந்தச் செயலும் வெற்றியாகும். * மனிதர்களை நேசி. அவர்களுக்கு சேவை செய். அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்ற தேவையானதை செய். * அனைவரிடமும் அன்பு செலுத்து. ஆனால், அடிமையாகி விடாதே-. *பயனற்ற கற்பனைகளை விட்டொழி. இயற்கையோடு இணைந்து வாழக் கற்றுக் கொள்-. * பாராட்டை எதிர் பார்க்காதே. உனக்கான பணியை உடனடியாக செய். * ஒழுக்கமே ஆனந்தத்தின் திறவுகோல் - அரவிந்தர்