செட்டியகாடு, அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மார் 2019 12:03
தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை வட்டம், செட்டியக்காடு என்னும் இடத்தில் கேட்ட வரங்களை அளிக்கும் அர்த்தநாரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் மகா சிவராத்திரி பெருவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
மிகவும் சக்தி வாய்ந்த இத்தலத்தில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. பக்தர்கள் தங்களால் இயன்ற பொருளுதவி, நிதி உதவி மற்றும் உடல் உழைப்பை அளித்து, அர்த்தநாரீஸ்வரர் அருள்பெற கோவில் திருப்பணி கமிட்டி சார்பில் கேட்டுக்கொண்டுள்ளனர். தொடர்புக்கு: 76390 85399