பதிவு செய்த நாள்
06
மார்
2019
02:03
ஓமலூர்: மஹா சிவராத்திரியையொட்டி, ஓமலூர், செவ்வாய் சந்தை அருகே, காசிவிஸ்வ நாதர் கோவிலில், நேற்று முன்தினம் (மார்ச்., 4ல்) மாலை, 5:00 மணிக்கு, முதல்கால பூஜை தொடங்கி, ஆறு கால பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இதையொட்டி, 1,000 கிலோ பூக்களால், கோவில் முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டது. நேற்று (மார்ச்., 5ல்) காலை, 5:30 மணிக்கு, தங்க கவசத்தில் காசிவிஸ்வநாதர் அருள்பாலித்தார்.
அதேபோல், தாரமங்கலம், கைலாசநாதர் கோவிலில், விடிய விடிய நடந்த, நான்கு கால பூஜையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஓமலூர், அண்ணாமலையார் கோவில், அக்ரஹாரம் வைத்தீஸ்வரன் கோவிலில், சிவராத்திரி விழா நடந்தது.
* வாழப்பாடி அருகே, பேளூர், தான்தோன்றீஸ்வரர் கோவிலில், ஆத்தூர், ஸ்ரீகிருஷ்ண கலாலயா நாட்டியப்பள்ளி மாணவியரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. நேற்று (மார்ச்., 5ல்) காலை, 6:00 முதல், 7:00 மணி வரை, நான்காம் கால பூஜை நடந்தது.
வாழப்பாடி அக்ரஹாரம் காசிவிஸ்வநாதர், பெத்தநாயக்கன் பாளையம் ஆட்கொண்டேஸ்வரர், ஏத்தாப்பூர் சாம்பமூர்த்திஸ்வரர், கல்யாணகிரி தேன்மலை சிவாலயம் கோவில்களில், சிவராத்திரியையொட்டி, நான்காம் கால பூஜை, சுவாமி திருவீதி உலா நடந்தது.