Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு ... சைலகிரீஸ்வரரை வழிபடும் சூரியன்: பக்தர்கள் பரவசம் சைலகிரீஸ்வரரை வழிபடும் சூரியன்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
18ம் நுாற்றாண்டு நடுகல் வரலாற்று ஆய்வாளர் வியப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
18ம் நுாற்றாண்டு நடுகல் வரலாற்று ஆய்வாளர் வியப்பு

பதிவு செய்த நாள்

07 மார்
2019
12:03

அவிநாசி: அவிநாசி அருகே கண்டறியப்பட்டுள்ள, 18ம் நுாற்றாண்டை சேர்ந்த நடுகல், வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே எம்.நாதம்பாளையம் கிராமத்தில், மாதேஸ்வரன் கோவில் உள்ளது. கோவில் முகப்பில், ஒரு வீரனின் நடுகல் வைக்கப்பட்டுள்ளது. மூன்றரை அடி உயரம், ஒன்றரை அடி அகலத்தில் உள்ள நடுகல்லில் உள்ள வீரனின் சிகை அலங்காரம், இடப்பக்கம் சாய்ந்த நிலையில் உள்ளது.

திருப்பூர் வீரராஜேந்திரன் தொல்லியல் மற்றும் ஆய்வு மைய இயக்குனர் ரவிகுமார் கூறியதாவது: காதுகளில் கடிப்பு வகை அணிகலன், கழுத்துப்பகுதியில் கண்டிகை, வீரத்துக்கு அடையாளமாக வீரச்சங்கிலி அணிந்துள்ளது போன்றும், முழங்கையில் கடக வளை, மணிக்கட்டு மற்றும் பாதத்தில், வீர காப்பும் அணிந்துள்ளது போன்றும் செதுக்கப்பட்டுள்ளது. இடுப்பில், இடை கட்டுடன் தொங்கு நிலை கொண்ட வேலைபாடுடன் கூடிய ஆடை அணிந்து, தனது இடது கையில் துப்பாக்கி, வலது கையில் ஈட்டி வைத்துள்ளது போன்று தோற்றமளிக்கிறது. இருப்பினும், எவ்வித எழுத்துப் பொறியும் அதில் இல்லை. இது, கி.பி., 18ம் நுாற்றாண்டை சார்ந்ததாக இருக்கலாம். நடுகல் காணக்கிடைப்பது, தற்போது அரிதாகி இருக்கிறது. நடுகல்லை பூஜித்து வணங்கினால், ஆபத்து நேரத்தில், முன்னோர் காப்பாற்றுவர் என்பது, கிராமப்புற மக்களின் நம்பிக்கை. இவ்வாறு, அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar