பதிவு செய்த நாள்
07
மார்
2019
11:03
நாமக்கல்: மாசி அமாவாசையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கவச அலங்காரம் நடந்தது. நாமக்கல் ஆஞ்சநேயர், ஒரே கல்லினால், 18 அடி உயரத்தில் நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
மாதந்தோறும் ஒவ்வொரு தமிழ் முதல் ஞாயிற்றுக்கிழமை, அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட நாட்களிகளில் சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெறும். நேற்று மாசி அமாவாசையை முன்னிட்டு காலை, 9:00 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடை மாலை அலங்காரம் நடந்தது. பின்னர், நல்லெண்ணெய், பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வெற்றிலை, துளசி மாலைகள் அணிவித்து சொர்ணாபிஷேகம் நடந்தது. பின், ஆஞ்சநேயருக்கு தங்க கவச அலங்காரம் சாற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.