சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு அதிகார நந்தி வாகனத்தில் வீதி உலா வந்து கபாலீஸ்வரர் மற்றும் கற்பகாம்பாள் அருள்பாலித்தனர்.
சென்னை, மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில், பங்குனி பெருவிழா 11ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று அதிகார நந்தி வாகனத்தில் கபாலீஸ்வரர் மற்றும் கற்பகாம்பாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.