Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ... மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) முயற்சியில் வெற்றி மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ...
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) சுக்கிரனால் ஆதாயம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) சுக்கிரனால் ஆதாயம்

பதிவு செய்த நாள்

13 மார்
2019
04:03

தாராள மனப்பான்மை கொண்ட தனுசு ராசி அன்பர்களே!

சூரியன் சாதகமற்ற இடத்திற்கு சென்றாலும் கவலை வேண்டாம். ஏனெனில் சுக்கிரனால் தொடர்ந்து நற்பலன் உண்டாகும்.  செவ்வாய் மார்ச் 20ல் இருந்தும், புதன் ஏப்.9ல் இருந்தும் நன்மை வழங்குவார். சுக்கிரனால் மதிப்பு, மரியாதை உயரும். மார்ச் 22க்கு பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர்களின் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம்.

குடும்பத்தினர் ஆதரவுடன் நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். தேவைகள் பூர்த்தி ஆகும். மார்ச் 21க்கு பிறகு மகிழ்ச்சியும், கலகலப்பும் அதிகரிக்கும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும். மார்ச் 28,29ல் சகோதரவழியில் நன்மையை எதிர்பார்க்கலாம். அவர்களால் பண உதவி கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். மார்ச் 23,27ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் ஏப்.3,4,5ல்  உறவினர் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். அரசு ஊழியர்கள் சீரான முன்னேற்றம் காண்பர். கோரிக்கைகளை மார்ச் 22க்குள் கேட்டு பெற்று கொள்ளவும். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் அடைவர்.

தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு குருவால் திடீர் பணி, இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. ஏப்.8க்கு பிறகு வேலைப்பளு குறையும். உங்களின் திறமைக்கு ஏற்ப நல்ல பெயரும், மதிப்பும் கிடைக்கும். மார்ச் 21,22ல் எதிர்பார்த்த நன்மை வந்து சேரும்.

வியாபாரிகளுக்கு சுக்கிரனால் ஆதாயம் அதிகரிக்கும். வங்கிக்கடன் எளிதாக கிடைக்கும். சூரியன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் பெண்கள் வகையில் ஒதுங்கி இருக்கவும். புதனால் பகைவர் தொல்லை, அரசால் ஏற்பட்ட அனுகூலமற்ற போக்கு ஏப்.8க்கு பிறகு மறையும். வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். மார்ச்25,26,27,30,31ல் சந்திரனால் தடைகள் வரலாம். ஏப்.9,10ல் எதிர்பாராத வகையில் வருமானம் கிடைக்கும்.  

மாணவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். அதற்குரிய பலன்கள் இப்போது இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் நிச்சயம் கிடைக்கும். ஏப்.8க்கு பிறகு எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். தேர்வில் அதிக மதிப்பெண், போட்டியில் வெற்றி உண்டாகும். சிலர் மேல்படிப்புக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்புண்டு.  

கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவர். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். தொழில் ரீதியான பயணத்தால் இனிய அனுபவம் கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல தொண்டர்கள் பிரதிபலன் எதிர்பாராமல் பாடுபட வேண்டியதிருக்கும். மார்ச்21க்கு பிறகு எதிர்பார்த்த பதவி கிடைக்கும். ஏப்.6,7,8 ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

விவசாயிகள் எதிர்பார்த்ததை விட அதிக மகசூல் கிடைக்கப் பெறுவர்.  மார்ச் 21க்கு பிறகு புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். வழக்கு, விவகாரங்களில் முடிவு சாதகமாக அமைய வாய்ப்பு உண்டு. கைவிட்டு போன பொருள் மீண்டும் கிடைக்கும். பக்கத்து நிலத்துக்காரர்கள்  உதவிகரமாக இருப்பர். ஏப்.8க்கு பிறகு கால்நடை வளர்ப்பின் மூலம் ஆதாயம் பெருகும்.  

பெண்கள் குடும்ப வாழ்வில் நிம்மதி காண்பர்.  மார்ச்21க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சிலருக்கு புதிய பதவி தேடி வரும். தொழில் புரியும் பெண்களுக்கு வருமானம் அதிகரிக்கும். ஏப்.1,2ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனம் கிடைக்கப் பெறலாம். மார்ச் 15,16, ஏப்.11,12 சிறப்பான நாட்களாக அமையும்.

சனிபகவானால் அக்கம்பக்கத்தினருடன் வீண்மனக்கசப்பு ஏற்படலாம். நெருப்பு, மின்சாரம் தொடர்பான வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். மார்ச் 20 வரை  பிள்ளைகளின் உடல்நலனில் அக்கறை தேவை.

* நல்ல நாள்: மார்ச்15, 16, 21, 22, 23, 24, 28, 29, ஏப்.1, 2, 9, 10, 11, 12
* கவன நாள்: மார்ச்17,18, ஏப்.13 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 4,8
* நிறம்: வெள்ளை,  சிவப்பு

பரிகாரம்:
*  தினமும் காலையில் நீராடி சூரியநமஸ்காரம்
*  வெள்ளிக்கிழமையில் நாகதேவதை வழிபாடு
*  சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் தரிசனம்

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar