Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) ... கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) வந்தாச்சு பதவி உயர்வு கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ...
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) முயற்சியில் வெற்றி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) முயற்சியில் வெற்றி

பதிவு செய்த நாள்

13 மார்
2019
04:03

உள்ளதைச் சொல்ல விரும்பும் மகர ராசி அன்பர்களே!

இந்த மாதம் சூரியன், ராகு, சுக்கிரனால் நற்பலன்கள் உண்டாகும். சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார வளம் கூடும். ராகு உங்களுக்கு எண்ணற்ற பல நன்மைகளை செய்ய காத்திருக்கிறார். குறிப்பாக முயற்சியில் வெற்றி தருவார். பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை உண்டாகும். உங்கள் ஆற்றல் மேம்படும்.

குடும்பத்தில் புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் கணவன், மனைவி  ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். சுக்கிரனால் பெண்கள்  உதவிகரமாக செயல்படுவர். அவர்களால் பொன், பொருள் சேரும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். மார்ச் 21க்கு பிறகு மதிப்பு, மரியாதை கூடும். மார்ச்30,31 ஏப்.12,13ல் சகோதர வழியில்  உதவி கிடைக்கும்.  மார்ச் 25,26,27ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும் ஆனால் ஏப்.6,7,8ல் உறவினர்கள் வகையில் கருத்து வேறுபாடு வரவாய்ப்புண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும்.

பணியாளர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் வேலைப்பளு அதிகரிக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். உங்கள் பொறுப்புகளை நீங்களே செய்து முடிப்பது நல்லது. விடாமுயற்சி எடுத்தால் மட்டுமே கோரிக்கைகள் நிறைவேறும். ஏப்.23,24ல் நற்பலனை எதிர்பார்க்கலாம். மார்ச் 21க்கு பிறகு அரசு வேலையில் இருப்பவர்களுக்கு அதிகாரிகள் ஆதரவுடன் இருப்பர். சிலருக்கு விரும்பிய பணி, இடமாற்றம் கிடைக்கும். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.     
வியாபாரிகளுக்கு லாபம் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக வெளியூர் செல்ல நேரிடும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம்  முன்னேற்றம் அடையும். மார்ச் 21க்கு பிறகு சேமிக்கும் வகையில் வருமானம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு அரசு வகையில் சலுகை கிடைக்கும். வங்கிக்கடன் எளிதாக கிடைக்கும். தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்களின் பிடியில் இருந்து விடுபடுவர்.  ஏப்.8க்கு பிறகு பகைவர்களால் இடையூறு வரலாம். மார்ச் 15,16, ஏப்.11,12 ல் எதிர்பாராமல் அதிர்ஷ்டவசமாக வருமானம் கிடைக்கும்.  

மார்ச்28,29, ஏப்.6,7,8ல் சந்திரனால் தடைகள் குறுக்கிடலாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் மூலம் பொருளாதார வளம் காண்பர்.  மார்ச் 21க்கு பிறகு  அரசிடம் இருந்து விருது, பாராட்டு  கிடைக்கும். .அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சிறப்பான பலன் பெறுவர். எதிர்பார்த்த பதவி கிடைக்க வாய்ப்புண்டு. ஏப்.9,10ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்கள் தொடர்ந்து சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். போட்டிகளில் வெற்றி காண்பது அரிது. ஆசிரியர்களின் அறிவுரை கைகொடுக்கும். தீய நண்பர்களின் சகவாசத்திற்கு ஆளானவர்கள் மார்ச் 21க்கு பிறகு விடுபட்டு நிம்மதியடைவர். அரசு வகையில் கல்வி உதவித்தொகை கிடைக்கும்.

விவசாயிகளுக்கு  வருவாய்க்கு குறைவிருக்காது. கிழங்கு வகைகள், நிலக்கடலை, கரும்பு, எள், கேழ்வரகு, பழ வகைகள், காய்கறி வகைகள் மூலம் அதிக வருமானத்தைக் காணலாம்.  வழக்கு, விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம். புதிய சொத்து வாங்க அனுகூலம் இல்லை. கால்நடைகள் மூலம் சுமாரான ஆதாயம் கிடைக்கும்.

பெண்களுக்கு குடும்ப ரீதியாக கடினமாக  உழைக்க வேண்டியதிருக்கும். ஆனாலும் திறமைக்கு ஏற்ற கவுரவம் கிடைக்கும். மார்ச் 21க்கு பிறகு நிலைமை சீராகும்.  சுய தொழில் செய்து வரும் பெண்கள் நல்ல வளர்ச்சி காண்பர்.

ஏப்.3,4,5ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்க யோகமுண்டாகும். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனப் பொருள் வரப் பெறலாம். மார்ச் 17,18, ஏப்.13ல் விருந்து, விழா என செல்வீர்கள். உடல்நிலை சிறப்பாக இருக்கும். கண் தொடர்பான உபாதை பூரண குணம் பெறும். மார்ச் 21க்கு பிறகு  பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.

* நல்ல நாள்: மார்ச் 15,16,17,23,24,25,26,27,30,31 ஏப்.3,4,5,11,12,13
* கவன நாள்: மார்ச் 19,20 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்:3,9
* நிறம்: வெள்ளை, சிவப்பு

பரிகாரம்:
*  செவ்வாயன்று துர்க்கைக்கு எலுமிச்சை தீபம்
*  கார்த்திகை விரதமிருந்து முருகன் வழிபாடு
*  சுவாதியன்று லட்சுமி நரசிம்மருக்கு பானகம்

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar