பெரியகுளம்: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவங்குகிறது. இதனையொட்டி பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் ‘ஹரே ராம ஹரே ராம,’என்ற 13 மணி நேரம் அகண்ட நாம மகாமந்திரம் நாமகீர்த்தனம் செய்யப்பட்டது. மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டியும், அவர்களது உடல்நலம் மற்றும் மனநலம் காக்காவும் பிரார்த்தனை செய்யப்பட்டது. மாணவர்கள், பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நாமத்வார் பொறுப்பாளர் கிருஷ்ணசைதன்யதாஸ் உள்ளிட்டோர் செய்தனர்.