பதிவு செய்த நாள்
15
மார்
2019
12:03
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவிலில் நாளை (மார்ச்., 16ல்) முதல் தொடர்ந்து, 10 நாட்களுக்கு பிரமோற்சவ விழா நடக்கிறது.
பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பழமையான கரிவரதராஜ பெருமாள் கோவிலில், 14ம் ஆண்டு பிரமோற்சவ விழா நாளை (மார்ச்., 16ல்)கொடியேற்றத்துடன் துவங்குகிறது. நாளை (மார்ச்., 16ல்) காலை, 10:30 மணிக்கு கொடியேற்றமும், மாலை, 6:00 மணிக்கு அன்ன வாகனத் தில் சரஸ்வதி அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
தொடர்ந்து, 17ம் தேதி சின்னவாகனமும், 18ல் முத்துபந்தல், 19ல் அனுமந்த வாகனம், 20ல் கருட வாகனம், 21ல் திருக்கல்யாண உற்சவம், யானை வாகனம், 22ல் திருத்தேரும், 23ல் குதிரை வாகனம், பரிவேட்டையும், 24ல் சேஷ வாகனம், தெப்பத்தேர், 25ல் பல்லக்கு சேவை, சந்தன சேவை, தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை, அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.