பதிவு செய்த நாள்
20
மார்
2019
02:03
திருச்சி: திருச்சி, லால்குடியில் உள்ள சப்தரிஷீஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. திருச்சி, லால்குடியில் அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற சப்த ரிஷீஸ்வரர் கோவில் உள்ளது. சப்த ரிஷிகளுக்கு முக்தி தந்த தலமான இங்கு, பங்குனி திருவிழா தேரோட்டம் மற்று நாயன்மார்கள் திருவீதி உலா, விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டு பங்குனி திருவிழா, கடந்த, 11ல் துவங்கியது. தொடர்ந்து, பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடந்தது. நேற்று (மார்ச்., 19ல்) காலை பங்குனி தேரோட்டம் நடந்தது. இன்று (மார்ச்., 20ல்) நடராஜர் அபிஷேகம், நாயன்மார்கள் திருவீதி உலா நடக்கிறது. சோமாஸ்கந்தர் திருவீதி உலா மற்றும் பிச்சாடனார், சண்டிகேஸ்வரர் திருவீதி உலா போன்றவை, ஏப்ரல் 10 வரை நடைபெறுகிறது.