பதிவு செய்த நாள்
21
மார்
2019
11:03
கமுதி: கமுதியில் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு பக்தர்கள் சேத்தாண்டி வேடமணிந்து, நேர்த்திகடன் செலுத்தினர்.கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் மார்ச் 12 ல், துவங்கியது.
12 நாட்கள் நடந்த, பொங்கல் விழாவில் தினமும், அம்மன் நகர் வலம் வருதல், காமதேனு, ரிஷபம், குதிரை, மயில் வாகனத்திலும் நகர் வலம்வந்தார்.கழுகேற்றம், யானை வாகனம், பொங்கல் வைத்தல், மாவிளக்கு, காணிக்கை செலுத்தி, சிம்ம வாகன ஊர்வல நிகழ்ச்சிகள் நடந்தது.முத்துமாரியம்மன் சூரசம்ஹாரம் செய்தல், பொங்கல் வைத்தல், அக்கினி சட்டி, பால்குடம், கரும்பாலை தொட்டில் நேர்த்திகடன், பூக்குழி இறங்குதல், அன்னபறவை வாகனத்தில் நகர் வலம், மஞ்சள் நீராட்டு, அம்மன் ரதத்தில் ஊர்வலம், வெள்ளிக்குதிரை வாகனத்தில்நகர் வலம், சேத்தாண்டி வேடம், கரகம், சிலம்பாட்டம், மயில், புலி, மாடு வேஷமிட்டு பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். இரவு அன்னவாகனத்தில் அம்மன் நகர் வலம் நடந்தது. கமுதி மக்கள் 300 ஆண்டுகளுக்கு முன் உடலில் அம்மை உள்ளிட்டதோல் நோய்களால் பாதிக்கப்பட்ட நிலையில், பக்தர்கள் சேத்தாண்டி வேடமணிந்து இங்குள்ள ஸ்ரீமுத்துமாரியம்மனை வழிபட்டனர். அதனால் மக்கள் உயிர் இழப்பில் இருந்துகாப்பாற்றப்பட்டதை நினைவு கூர்ந்து தோல் நோய்களில் இருந்து காக்க ஆண்டுதோறும் முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழா நிகழ்ச்சி முடிந்த மறுநாள்பக்தர்கள் கமுதி செட்டி ஊரணியில் உடல் முழுவதும் சேறு பூசி, சேத்தாண்டி வேடமணியும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்படி நேற்று சேத்தாண்டி வேடமணிதல் நடந்தது. உடலில்வேப்பிலை சகிதமாக கமுதி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் சேத்தாண்டி வேடமணிந்து நேர்த்திகடன் செலுத்தினர். பின்பக்தர்கள் பூக்குழி இறங்கி, நேர்த்திகடன் செலுத்தினர். ஏற்பாடுகளை, கமுதி சத்ரிய நாடார் உறவின் முறை கமிட்டியினர் செய்தனர்.